உள்ளடக்கத்திற்கு செல்ல
எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை
எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை
ADDED : மே 29, 2026 12:27 AM
அ நிறம் | அளவு
சென்னை: 'தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த, நான்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பின்னணியை ஆராய, சி.பி.ஐ., விசாரணைக்கு, உத்தரவிட வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி., தனபால் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., ஆட்சிப்பொறுப்பு ஏற்ற உடனேயே, நான்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டும்.
இந்த விவகாரத்தில், மிகப்பெரிய அளவில், பணப்பரிமாற்றம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அமலாக்க துறையும், கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
