தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., தலைமையகத்தில் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்

 தி.மு.க., தலைமையகத்தில் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்

 தி.மு.க., தலைமையகத்தில் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்


ADDED : மார் 30, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 03:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபை தேர்தலில் தாம்பரம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டார்.

இதனால், அதிருப்தி அடைந்த தற்போதைய எம்.எல்.ஏ., ராஜாவின் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர்; அமைச்சர் அன்பரசனை கண்டித்து கோஷமிட்டனர்.

அவர்களை டி.ஆர்.பாலு சமாதானப்படுத்தியபோது, ஆதரவாளர் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அவரை பார்த்த டி.ஆர்.பாலு, 'என்னய்யா நடிச்சிட்டு இருக்க; சீன் போடுகிறாய்' என கண்டித்து, அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தி.மு.க., தலைமையகத்தில் ராஜா ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்; 'கிருத்திகா தேவியை மாற்ற வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.

சென்னை மண்டல பொறுப்பாளரும், தி.மு.க., துணை பொதுச்செயலருமான ராஜா, அவர்களிடம் சமரச பேச்சு நடத்தி, அனுப்பி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us