ADDED : செப் 23, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் : தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழகம்' தீர்மான ஏற்பு பொதுக் கூட்டம், நாகர்கோவிலில் நடந்தது.
கூட்டத்துக்கு, ஏராளமான வாகனங்களில், பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பாலமோர் ரோட்டில் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கனிமொழி பேசியபோது, அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. உடனே, கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு, 'ரோட்டில் இருந்து ஒதுங்கி, இரண்டு அடி உள்ளே வாருங்கள்.
ஆம்புலன்ஸ் செல்ல வழி விடுங்கள்' என தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தினார்.