தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பணி ஓய்வு பெற்றார் நீதிபதி சுரேஷ்குமார்

 பணி ஓய்வு பெற்றார் நீதிபதி சுரேஷ்குமார்

 பணி ஓய்வு பெற்றார் நீதிபதி சுரேஷ்குமார்


ADDED : மே 29, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 01:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நேற்று ஓய்வு பெற்றார். நீதிபதியாக பணிபுரிந்த, 10 ஆண்டுகளில், 36 ஆயிரம் வழக்குகளுக் கு மேல் தீர்ப்பளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையில், 1964ல் பிறந்தவர் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். 1989ல், சென்னை சட்ட கல்லுாரியில் சட்டப்படிப்பை முடித்து, தமிழக பார் கவு ன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

கடந்த 2016 அக்., 5ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

விஜய் வழக்கு இவர், சென்னை மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தி அழகுப் படுத்துதல், ஏராளமான ஏரி குளங்களை துார்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வடகலை - -தென்கலை விவகாரம், நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் நேற்று வரை, 10 ஆண்டுகளில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு என, மொத்தம் 36,093 வழக்குகளை விசாரித்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தீர்ப்பளித்து உள்ளார்.

தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் பணிபுரிந்த மூத்த நீதிபதியான சுரேஷ்குமார், தன் பதவி காலத்தில் உயர் நீதிமன்ற கட்டட கமிட்டி தலைவராக இருந்து, மாநிலம் முழுதும் புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைய வித்திட்டவர்.

சென்னை உயர் நீதிமன்றம் அருகே செயல்பட்டு வந்த சட்ட கல்லுாரி வளாகத்தை, உலகத் தரத்தில் பழமை மாறாமல் புனரமைத்து, அங்கு ஆறு நீதிமன்ற அறைகளை அமைத்தார்.

இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். நேற்றுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பிரிவு உபசார விழாவை தவிர்த்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 51 ஆக குறைந்துள்ளது; 24 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us