கோவில் பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் படமா?
கோவில் பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் படமா?
ADDED : செப் 15, 2025 03:37 AM

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் -அபிராமி அம்மன் கோவிலில், ஏழை ஹிந்து ஜோடிகளுக்கு தலா 60,000 ரூபாய் செலவில் திருமணம் நடந்தது. அறநிலையத்துறை கோவில்களில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் தான் இந்த திருமணங்கள் நடக்கின்றன.
பல கோவில்களில் ஏழைகளுக்கு திருமணம் என்ற பெயரில் வசூல் வேட்டை, முறைகேடு அரங்கேறுகிறது. இதுவரை, அறநிலையத்துறை நடத்தி வைத்த திருமணங்களின் வரவு - செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டதில்லை.
திண்டுக்கல் கோவிலில் நடந்த திருமணத்தின்போது, அபிராமி அம்மன் தெய்வ உருவப்படத்தை வைக்காமல், முதல்வர் ஸ்டாலின் படத்தை மட்டும் விளம்பர பேனரில் வைத்தது சட்ட விரோதம். பக்தர்களின் காணிக்கை பணத்தில் திருமணங்களை நடத்திவிட்டு, தெய்வங்களை புறக்கணித்து, தி.மு.க., தலைவர் படத்தை இடம்பெறச் செய்வதற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சட்ட ரீதியில் தீர்வு பெறுவோம்.
- ராம ரவிக்குமார்
தலைவர், ஹிந்து தமிழர் கட்சி