உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 12, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, மாநில தகவல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளம், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
மாநில தகவல் ஆணையத்தின் இணையதளம், கடந்த நான்கு நாட்களாக முடங்கி இருந்தது.
இதனால், மேல்முறையீடு செய்த, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்கள் வழக்கு விபரங்களை அறிய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஆணையத்தில், தினசரி நடக்கும் வழக்கு விசாரணைப் பட்டியல், ஆணையம் பிறப்பிக்கும் தீர்ப்பு நகல் என எதையும், மக்கள் இணையதளத்தில் பார்க்க முடியாமல் இருந்தனர்.
இணையதளம் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அதை தொடர்ந்து, இணையதளம் சரி செய்யப்பட்டு, நேற்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
