/

செய்திகள்

/

தமிழகம்

/

தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் அழிக்க ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

/

தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் அழிக்க ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் அழிக்க ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் அழிக்க ஐ.ஐ.டி., ஆராய்ச்சி


ADDED : ஜூன் 03, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஏரி நீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை, வைரஸ்களை பயன்படுத்தி அழிப்பது தொடர்பாக, அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு துறை கவுரவ பேராசிரியர் கார்த்திக் அனந்தராமன் கூறியதாவது:

அமெரிக்காவின் விஸ்கான்சின் - மாடிசன் பல்கலையின் நுண்ணுயிர் வைரஸ் சூழலியல் துறையுடன் இணைந்து, ஏரி தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பாக்டீரியாக்களை தெரிந்து கொள்ள, ஆராய்ச்சிகள் அவசியம். இது, சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்க கூடியது.

தண்ணீரில் நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு, குறிப்பிட்ட வைரஸ்களை பயன்படுத்தலாம். இந்த முறையை, 'பேஜ் தெரபி' என்கிறோம்.

இந்த வகையில், பாக்டீரியாக்களை அழிக்க, 13 லட்சம் வைரஸ் மரபணுக்களை மறு கட்டமைத்துள்ளோம். இதன் வாயிலாக, மாசடைந்த ஏரிகள், நீர் வளங்களை மீட்டெடுக்க முடியும். பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.