பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
ADDED : செப் 12, 2025 09:15 AM

சென்னை: ''10 நிமிஷம் தான் பேச அனுமதி கேக்குறாங்க, இதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும், நடிச்சு பாத்துட்டு வந்து பேசணும்'' என விஜயை கடுமையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: கொள்கை தலைவர் என்று நீ அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேச வேண்டாமா? காமராஜர் கொள்கை தலைவர் என்றால் யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசு. வேலு நாச்சியார் யார் என்று 10 நிமிடம் பேசு.
நீ மொத்தமாக பேச அனுமதி கேட்குறது 10 நிமிடம் தான். திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம் தான் கேட்டு இருக்காங்க. அரசு பேசுறதுக்கு கூட 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும்.
பிக்பாஸ் மாதிரி ஜனங்கள் விஜய் வருகிறார் என்கிறார்கள். வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீ வேடிக்கை காட்ட வருகிறாய். ஒரு அடிப்படை தெரிகிறதா? நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமாக இருக்கிறாய். கோட்பாடு அளவில் தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் அண்ணன், தம்பி இல்லை என்கிறாமா, சண்டை போடுகிறாமா?
பெரிய எதிரி உடன் மல்லுக்கட்டி முன்னேறி போகிறேன். எளிய மகன் முன்னேறி வரும் போது அண்ணன் கமலஹாசனை குறுக்கே விட்டார்கள்.
அதனை அடித்து முன்னேறி போகும் போது இவர் வருகிறார். எவனாவது அவர் பேசுவதை உட்கார்ந்து கேட்டு பார்த்து இருக்கிறீர்களா, தியேட்டரில் முதல் காட்சி கத்துகிற மாதிரி தான். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கை. அவன் எதிர்காலத்திற்கு தான் நான் போராடி கொண்டு இருக்கேன். நான் இங்க சண்டை போட்டு இருக்கும் போது தான் எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது.
பாஜ உன் கொள்கை எதிரி. முதலில் உன் கொள்கையை சொல்லு, நான் எதிரா, இல்லையா என்று பார்க்கிறேன். முதலில் உன் கொள்கை எதிரியை சொல்லுப்பா. எந்த எந்த அரசியலில் முரண்படுகிறாய்? பாஜவுக்கும், காங்கிரசுக்கும் என்ன கொள்கை வேறுபாடு என்று சொல்லு. பாஜ, காங்கிரஸ், அதிமுக, திமுக கொடியில் வண்ணம் மாறும். எண்ணம் மாறாது. பார்ட்டி (கட்சி) மாறும். பாலிசி (கொள்கை) மாறாது. திமுகவுக்கு மாற்று திமுக எப்படி இருக்க முடியும்? நெருப்பை எப்படி நெருப்பால் அணைக்க முடியும்?
அங்கு ஒரு தண்ணீர் தேவைப்படுகிறது. ஊழல், லஞ்சத்திற்கு எதிராக உண்மையும், நேர்மையும் இருக்க முடியும்.
முதல்வராக ஆவது லட்சியம் இல்லை. முதல்வர் ஆகி என்ன செய்ய போகிறேன் என்பது தான் இலக்கு, லட்சியம்.ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி வழங்கப்படும். உலக தரத்தில் கல்வி, மருத்துவம் கொடுப்பேன். இது என் கனவு. படித்தவன், படிக்காதவன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன். படிக்காதவன் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். இவ்வாறு சீமான் பேசினார்.