தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஹிந்து முன்னணி போராட்டம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

 ஹிந்து முன்னணி போராட்டம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

 ஹிந்து முன்னணி போராட்டம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


ADDED : டிச 08, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றபோது, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஒருவரது மாலை அறுந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்


திருப்பூரில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஹிந்து முன்னணி அறிவித்தது. போலீஸ் தடையை மீறி ஹிந்து முன்னணியினர் நேற்று மாலை குவிந்தனர். தாராபுரம் சாலை, புதுார் பிரிவு அருகே, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல, புஷ்பா சந்திப்பு பகுதியில் மாநில செயலர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கைது செய்யப்பட்டனர். ஹிந்து முன்னணி சார்பில், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, கைகளில் கார்த்திகை தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் முழுதும் 1,000த்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

மதுரை

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில செயலர் சேவுகன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையை அடுத்த எழுமலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

கோவை

தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில் ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்வபுரம் சாலை, சிவாலயா சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். செட்டி வீதி சந்திப்பில் ஹிந்து மக்கள் கட்சியினர், சாலையில் அமர்ந்து, 'தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்' என கோஷமிட்டனர்.

இதையடுத்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட, 40க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்யக் கோரியும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us