உயர்கல்வித்துறை லஞ்சம், ஊழல் இல்லாமல் செயல்படும்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
உயர்கல்வித்துறை லஞ்சம், ஊழல் இல்லாமல் செயல்படும்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
ADDED : ஜூன் 13, 2026 06:53 PM

திருவாரூர்: ''உயர்கல்வித்துறை லஞ்ச ஊழல் இல்லாமல் செயல்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உறுதியளித்தார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் விஸ்வநாதன் , நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உயர்கல்வித்துறையை பொருத்தவரை, மாணவர்கள் இடைநிற்றல் எத்தனை சதவீதம், கல்லூரி சேர்க்கை காலியிடம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதியான மாணவர்களுக்கு உறுதியாக கல்லூரியில் இடம் கிடைக்கும்.
தமிழ்நாட்டுக்கு, நீட் விலக்கு வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் கவனமாக இருக்கிறார். நீட்தேர்வில் நடக்கும் குளறுபடிகள் அனைத்தும் மத்திய அரசை சார்ந்தது.கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. நானும் காங்கிரஸ் அமைச்சர்தான். மேகதாது அணை விஷயத்தில், கர்நாடக அரசு ஒரு கல்லைக்கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்.
உயர் கல்வித்துறையில், துணைவேந்தர் பணி நிரப்பப்படவேண்டும். புதிதாக,பணி நியமனமும் உள்ளது. ஏற்கனவே,பணியில் உள்ள, 8 ஆயிரம் விரிவுரையாளர் பணி நிரந்தர பிரச்னையும் உள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகம் போன்ற வற்றில் பிரச்னை உள்ளது. உயர்கல்வித்துறை லஞ்ச ஊழல் இல்லாமல் செயல்படும். திருவாரூர் மாவட்டமும், லஞ்ச ஊழல் இல்லாமல் செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
