தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 5 மாவட்டங்களில் இன்று கனமழை

 5 மாவட்டங்களில் இன்று கனமழை

 5 மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஜூன் 22, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், 5 செ.மீ.,

ஆந்திர மாநிலம் ராயலசீ மா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மாவட்டங்களில் சில இடங்களில், இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளி காற்று வீசலாம். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us