sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

/

ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

27


ADDED : செப் 25, 2025 07:27 AM

Google News

27

ADDED : செப் 25, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி .எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்திருப்பதால், சந்தையில் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அதனால், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களை, பொதுமக்கள் வாங்கத் துவங்கி விட்டனர். 'என்கொயரி'யில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு நேரில் வந்து, தேவையானதை வாங்கிச் செல்வதால், வர்த்தகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்களின் கருத்துக்களில் சில...


கார் விற்பனை அதிகரிக்கும்!

ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்களிடம் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்காகவே காத்திருந்ததுபோல், சில நாட்களாக எங்களை தொடர்பு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

புக்கிங்கும் நடந்து வருகிறது. ஹூண்டாய் பேசிக் மாடல்களில், கிராண்ட் ஐ10 நியாஷ் மாடல், ரூ.5,98,300ல் இருந்து, 5,47,278 என, ரூ.51,022 குறைந்துள்ளது.

எக்ஸ்டர் - ரூ.6,20,990ல் இருந்து, 5,68,033 என, 52,957 ரூபாய் குறைந்துள்ளது. ஐ 20 - ரூ.7,50,900ல் இருந்து, 6,86,865 என, 64,035 ரூபாய் குறைந்துள்ளது. உயர் ரக மாடலான, டுசான் ரூ.29,26,800 ல் இருந்து, 27,31,661 என, 1,95,139 ரூபாய் குறைந்துள்ளது.

இத்துடன், உயர் ரக மாடல்களில், ரூ.50,000 முதல் 2,50,000 வரை விலை குறைந்துள்ளது. இத்துடன், ஷோரூமில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் விழாக்கால தள்ளுபடி என மேலும் இதன் விலை குறையும் என்பதால், கார்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

-மணிகண்ட வாசகன், உதவி பொது மேலாளர் (விற்பனை), சந்திரா ஹூண்டாய்.

எதிர்பார்க்காத ஒன்று

ஜி.எஸ்.டி.,யில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது, யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இது மிகப்பெரிய தள்ளுபடி. வழக்கமாக டிச., மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அதுவரை காத்திருந்து, வாகனங்களை வாங்குவர். ஆனால், தற்போது பண்டிகை காலத்தை ஒட்டி நாங்கள் வழங்கும் சலுகைகளுடன் சேர்த்து, இந்த வரி சீரமைப்பும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களாக அவர்களின் வருகை அதிகளவில் உள்ளது. வரி சீரமைப்பால், எஸ்-ப்ரஸ்சோ மாடல், ரூ.4,26,500ல் இருந்து, ரூ.3,49,900 என, 76,600 ரூபாய் குறைந்துள்ளது. ஆல்டோ கே 10 - ரூ.4,23,000ல் இருந்து, ரூ.3,69,900 என, 53,100 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல், செலிரியோ, வேகன் ஆர் மாடல்களுக்கு ரூ.75,500ம், ஸ்விப்ட் ரூ.78,000மும் குறைந்துள்ளது. இதனால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

-ராஜேஷ் ஜெயராமன், பொது மேலாளர், அம்பாள் ஆட்டோ(மாருதி)

நிறைவேறுகிறது கார் கனவு

வரி சீரமைப்பானது மக்களின் கார் வாங்கும் கனவை நிறைவேற்றியுள்ளது. எங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. விற்பனையும் அதிகரித்துள்ளது. எங்களின் டைகன் பேஸ் மாடல் - ரூ.10,99,000ல் இருந்து, ரூ.10,58,300 என, 40,700 ரூபாய் குறைந்துள்ளது.

இதில் டாப் மாடல், ரூ.19,83,000ல் இருந்து, ரூ.19,14,000 என, 69 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இத்துடன், கூடுதல் சலுகையாக, ரூ.2.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் பெறலாம். விர்டஸ் பேஸ் மாடல் - ரூ.10,54,000 ல் இருந்து, ரூ.10,14,000 என, 40 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.

இதன் டாப் மாடல், ரூ.19,39,000 ல் இருந்து, ரூ.18,73,000 என, 69 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு கூடுதல் சலுகையாக ரூ.1.6 லட்சம் வரை வழங்கப்படுகிறது. டைகன் ஆர் லைன் மாடல் ரூ.48,99,000 ல் இருந்து, 45,73,000 என, 3,26,000 ரூபாய் குறைந்துள்ளது. இத்துடன் ரூ.4 லட்சம் வரை கூடுதல் சலுகை உண்டு.

-செந்தில்ராஜ், விற்பனை பிரிவு மேலாளர், ரமணி போக்ஸ்வேகன்

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி

ஜி.எஸ்.டி., சீரமைப்பால், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விலை ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு குறித்த அறிவிப்பு வந்தது முதல் என்கொயரி மற்றும் புக்கிங் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.

கடந்த சில நாட்களாக அதிகப்படியாக உள்ளது. சில வாடிக்கையாளர்கள், இந்த வரி மேலும் குறையுமா என்று காத்திருக்கும் சூழலும் உள்ளது; அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது எங்களிடம் உள்ள ஷாதி மாடல், ரூ.6,75,000ல் இருந்து, ரூ.6,26,000 என, ரூ.49 ஆயிரம் குறைந்துள்ளது.

இதேபோல், தோஸ்ட் மாடல், ரூ.8,64,000ல் இருந்து, ரூ.7,97,000 என, ரூ.67 ஆயிரம் குறைந்துள்ளது. வரி சீரமைப்பு, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

-ராஜேஷ்குமார், நிர்வாக இயக்குனர், சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ்.

4 முதல் 5 மடங்கு அதிகம்

வரி சீரமைப்புக்கு பின், எங்கள் விற்பனை 4 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது, எங்களை போன்ற வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், மக்களும் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொலிரோ/நியோ விலை, ரூ.1,27,200 குறைந்துள்ளது.

எக்ஸ்யுவி3எக்ஸ்ஓ (பெட்ரோல்) ரூ.1,39,600ம், இதில் டீசல் மாடல் ரூ.1,56,100ம், தார் 4டபியுள்டி (டீசல்) ரூ.1,35,000ம் என விலை குறைந்துள்ளது. இதேபோல், தார் 4டபிள்யூடி, ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-என், தார் ரோக்ஸ், எக்ஸ்யூவி700 மாடல்களுக்கும், ஒரு லட்சம் ரூபாய் முதல், 1,43,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இந்த வரி சீரமைப்பு அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிப்பதாக உள்ளது.

-சதீஷ்குமார், உதவி பொதுமேலாளர் (விற்பனை), சிஏஐ மகேந்திரா






      Dinamalar
      Follow us