/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!

ADDED : ஜூன் 21, 2025 09:50 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 09:50 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 19) ஆபரண தங்கம் கிராம் 9,265 ரூபாய்க்கும், சவரன் 74,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று (ஜூன் 20) தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, 9,210 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 440 ரூபாய் சரிவடைந்து, 73,680 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று (ஜூன் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து உள்ளது.