ADDED : செப் 28, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் வலுவான மக்கள் சக்தியாக இருந்து வருகிறது. கடந்த 1977, 1989 தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை வென்று, தன் பலத்தை நிரூபித்துள்ளது.
அதனால், வரும் காலங்களில், காங்., சார்பில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட, தி.மு.க.-விடம், அதிக தொகுதிகளை பெற வேண்டும்.
அதுமட்டுமல்ல, கூட்டணி ஆட்சியில் பங்கு பெறவும் வலியுறுத்த வேண்டும்; தென் மாவட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் வலுவாக உள்ளதால், இப்பகுதியில் மாவட்டத் தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி. வேட்பாளர் தேர்வில் உள்ளூர் தலைவர்களு க்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். நடிகர் விஜய், பா.ஜ.வைக் கண்டிப்பதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.