ADDED : செப் 21, 2025 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யுங்க! மதுரை மாவ ட்டம், மேலுார் மேற்கு ஒன்றிய அ.ம.மு.க., முன்னாள் இணை செயலர் சேகரனின் மகன் ராம்பிரகாஷ், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் அருகே நடந்த சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் வாலிபரை அடித்துக் கொன்ற குற்றவாளிகள் அனைவரையும், காவல் துறையினர் கைது செய்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே உள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி தர வேண்டும்.
தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க. ,