தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்யாதீர்: சீமான்

 பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்யாதீர்: சீமான்

 பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்யாதீர்: சீமான்


ADDED : பிப் 22, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: ''பேயை விவாகரத்து செய்து விட்டு, பிசாசை திருமணம் செய்யாமல், பேயையும், பிசாசையும் அகற்றி விட்டு, தேவதையான எங் களை அமர வைக்க வேண்டும்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த நா.த.க., மாநாட்டில், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

எங்களின் அரசியல், முற்றிலும் மாறுபட்டது. இங்கு அரசியல் என்பது, தேர்தல் அரசியலாகவும் விளம்பர அரசியலாகவும் இருக்கிறது. மக்களுக்கான சேவை அரசியலாக இல்லை. எங்களின் இலக்கு, தரமான கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, அதற்கேற்ற சம்பளம், அதை வைத் து வாழ்வது என மாற்றத்தை உருவாக்குவோம்.

எவ்வித சமரசமும் இல்லாமல், தோல்வி குறித்த கவலை இல்லாமல், சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல், தனித்து நிற்கிறோம். இங்கு இருப்பது, ரசிகர் கூட்டம் அல்ல; லட்சிய கூட்டம். நாட்டை நாசமாக்கிய இலவசத்திற்கு, இங்கு இடமில்லை. வளமான, இலவசத்திற்கு ஏங்காத, பொருளாதார மாற்றத்தை நா.த.க., செயல்படுத்தும்.

பெண்களுக்கு இலவசப் பேருந்து; அ.தி.மு.க., வந்தால் ஆண்களுக்கும் இலவசம். போக்குவரத்து துறையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துக் கொண்டு, இலவசமாக பஸ்சை ஓட்டுவோம் என்றால், அது அரசா அல்லது தரிசா என சிந்திக்க வேண்டும். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும், ஒரே கட்சி தான். ஒரே இடத்தில் எப்படி திருடுவது என பயிற்சி எடுத்த கூட்டம். தனித்த னியாக திருடுவர். ஒரே இடத்தில் பங்கு போட்டுக் கொள்வர். எந்த இடத்திலும், அவர்களுக்கு மாறுபாடு இல்லை.

ஒன்று திருடர்கள் முன்னேற்றம். மற்றொன்று அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்றம். இவர்களின் கொள்கை நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. அதேபோல், பா.ஜ., - காங்கிரசின் கொள்கையிலும் மாறுபாடு இல்லை. இந்திய நாட்டை யார் ஆள்வது என்றால், திராவிட கட்சிகள், பா.ஜ., காங்கிரஸ் பின்னாடி போகும். தமிழகத்தை யார் ஆள்வது என்றால், பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள், திராவிட கட்சிகள் பின்னாடி வரும். இவர்களுடன் சேராமல், நாம் முன்னாடி நிற்கிறோம்.

நான் ஆள வேண்டும் என கேட்பது எனது உரிமை. எதற்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ, அதன் அடிப்படையில், தாய் நிலத்தை நான் ஆள்வது உரிமை.

பிறர் ஆண்டு, நான் வாழ்வது அடிமைத்தனம். அவ்வாறு வாழ விரும்பவில்லை. ஈ.வெ.ராமசாமியை காப்பாற்ற பெரும் போராட் டம் நடத்துகின்றனர். அவரை பூஜை அறையில் வைத்து கூட கும்பிடட்டும். ஆனால், எனக்கு வேண்டாம்.

எம்மொழியும் கற்போம். மற்றவர்களெல்லாம் இலவசம் பக்கம். நாங்கள் அப்படி இல்லை. அவர்கள் திராவிடர்கள். நாங்கள் தமிழர்கள்.

தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பேயை விவாகரத்து செய்து விட்டு, பிசாசை திருமணம் செய்யாமல், பேயையும், பிசாசையும் அகற்றி விட்டு, தேவதையான எங்களை அமர வையுங்கள். மாறி, மாறி ஓட்டு போட்டு விட்டீர்கள்.

புதிதாக அவர்கள் வந்து எதுவும் செய்யப் போவதில்லை. ஒரே ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். உலகின் தலைசிறந்த மாநிலமாக மாற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் தோற்கடியுங்கள்.

தமிழர் என்ற உணர்ச்சியோடு ஓட்டு போடுங்கள். இந்த தேர்தல் மாறுதலாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

காரைக்குடியில் போட்டி!

நா.த.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, சீமான் அறிமுகப்படுத்தினார். இதில் பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என படித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். காரைக்குடியில் சீமான் போட்டியிடுகிறார். சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், திரைப்பட இயக்குனர் களஞ்சியம், திருவள்ளூர் தொகுதியில் செந்தில்குமார் போட்டியிட உள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us