UPDATED : அக் 01, 2025 06:52 AM
ADDED : செப் 29, 2025 10:54 PM

சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில் சுதேசி சமூக வலைத்தளமான அரட்டையில் புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் ஸோகோ நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளம் அரட்டை.வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களின் அம்சங்களை கொண்டுள்ள அரட்டை, கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, அரட்டை தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்த புதிய பயனர் சேர்க்கை எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக தினமும் மூன்றரை லட்சம் பேர் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டது.மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வரும் அரட்டை சமூக வலைதளத்தில் தினமலர் சார்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தினமும் முக்கிய செய்திகள், எக்ஸ்க்ளூசிவ் செய்திகள், படங்கள் வெளியிடப்படும்.
சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் அரட்டை சேனல் லிங்க்: