ADDED : ஜூன் 10, 2026 08:14 AM

கள் விற்பனைக்கு செயல் திட்டம் வகுத்திடுங்க
தென்காசி மாவட்டத்தில் பனை மரத்தில், க ள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, 'புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்கள், கள் விற்பனையை அனுமதிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் தடை உள்ளது. கள் விற்பனையை அனுமதித்தால், விவசாயிகள் பயன்பெறுவர் எனில், அரசு ஏன் அனுமதிக்க கூடாது. செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே' என, கேள்வி எழுப்பி உள்ளார். இது, மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துள்ளது. பனை தொழிலாளர்கள் நலனுக்காக நா.த.க., தொடர்ந்து போராடி வருவதற்கு வலு சேர்த்துள்ளது. எனவே, தமிழக அரசு, செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். நீதிபதி புகழேந்தியின் கேள்வியால், பனை தொழிலாளர்களின் கோரிக்கை, விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
