உள்ளடக்கத்திற்கு செல்ல

திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல்; பக்தர்கள் மயக்கம்
திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல்; பக்தர்கள் மயக்கம்
ADDED : மே 30, 2026 01:59 PM

அ நிறம் | அளவு
மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களில் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவர்களைப் போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். குடிநீர் உள்ளிட்டவற்றை கொடுத்தனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை எடுத்தனர்.
