தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை

பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை

பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை


UPDATED : பிப் 23, 2026 10:39 PM

ADDED : பிப் 23, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 10:39 PM ADDED : பிப் 23, 2026 05:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: '' திமுக அரசை சிலர் திராவிட மாடல் நிர்வாகம் என சொல்கின்றனர். அதனை ஏமாற்று மாடல் என நாங்கள் சொல்வோம். இந்த தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியல் பற்றி விஜய் புரிந்து கொள்வார்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியதாவது: பொது க்களுக்கு பணம் வழங்க வேண்டாம் எனக்கூறிவில்லை. பணம் வரும் போகும். அது மக்களுக்கு பலன் அளிக்கும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்றீர்கள். ஆனால் 28 மாதங்கள் கொடுக்கவில்லை 29 வது மாதம் முதல் கொடுக்க துவங்கினீர்கள். 5 ஆண்டுகள் பொங்கல் பண்டிகை வந்தது. 3 பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் பணம் கொடுக்கவில்லை.

இதனைத்தான் மக்களிடம் சொல்கிறோம். இதனை திராவிட மாடல் நிர்வாகம் என சிலர் சொன்னால், அதனை மோசடி மாடல் அரசு என சொல்வோம். நீங்கள் 60 மாதம் பணம் கொடுத்து இருந்தால், அதனை பாராட்டி இருப்போம். நீங்கள் 28 மாதங்கள் மறந்துவிட்டீர்கள். அந்த மாதத்துக்கு உரிய தொகையை கொடுக்கவில்லை. அனைத்து பொங்கல் பண்டிகைக்கும் பணம் கொடுக்கவில்லை. திடீரென கோடைகால சிறப்பு நிதியை அறிவித்துள்ளீர்கள். 2024 மற்றும் 2023ம் ஆண்டில் கோடைகாலம் வரவில்லையா?

பணம் கொடுப்பது என்பது முதல்வரின் விருப்பம். பட்ஜெட்டை சரி செய்து கொடுக்க விரும்பினால் அது உங்கள் விருப்பம். அதனை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு அதனை தடுக்க விரும்புவதாக கூறுவதை தான் விமர்சிக்கிறேன். பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என நினைப்பது தவறு.

தேர்தலுக்கு முன்னர் நிதி என்ற பெயரில் பணம் கொடுத்வர்கள் தோல்வியடைந்ததற்கு ஜெகன் மோகன், சந்திரசேகர ராவ் ஆகியோர் உதாரணமாக உள்ளனர்.

தவெக ஒரு சக்தி என்பதை மறுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளே ஆன கட்சிக்கு களத்தில் பார்க்கும் தொண்டர்களின் எண்ணிக்கை நன்றாக உள்ளது. ஆனால் விஜய் களத்தில் இன்னும் நிற்க வேண்டும். கரூர் விவகாரத்தை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும். ஆனால், நான் விஜய் பக்கம் தான் நிற்கிறேன். இந்ததேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் குறித்து விஜய் புரிந்து கொள்வார். அரசியலுக்கு வந்த பிறகும் ஒரு சில விஷயங்களில் விஜய் அமைதியாகவே இருந்து உள்ளார்.

தமிழகத்திற்கு புதியவர்கள் இன்னும் தேவை. களத்தில் இன்னும் விஜய் நேரத்தை செலவிட வேண்டும். அவர் அதிக ஓட்டுகள் வாங்கும் நாள் வரும். அதனை மறுக்கவில்லை. தற்போதைய தேர்தலில் விஜய் பெரிய சக்தியாக இருந்தாலும், மூன்று முனை போட்டியாக கருதவில்லை. கரூரில் நடந்தது போன்று சேலத்திலும் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. நடுநிலைவாதி எனக்கூறி கொண்டு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மவுனம் காக்கின்றீர்கள்.

தேர்தல் காலம் மிகவும் முக்கியமானது. அதனை அவர்கள் எப்படி கையாள போகிறார்கள் என்பது முக்கியம். 2024 லோக்சபா தேர்தலில் தேஜ கூட்டணியில் அதிமுக இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக உள்ளது. எங்களது இலக்கு ஒன்று தான். நாங்கள் எங்கள் கூட்டணியுடன் இணக்கமாக உள்ளோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us