உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 18, 2026 01:41 AM

அ நிறம் | அளவு
சென்னை: அரசியல் விமர்சகரும், தி.மு.க., ஆதரவு பேச்சாளருமான பொன்ராஜ், த.வெ.க., பெண் தொண்டர்கள் பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தற்போது முதல்வராக உள்ள, த.வெ.க., தலைவர் விஜய் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.
அதே நேரத்தில், த.வெ.க.,வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொன்ராஜ் புகார் அளித்திருந்தார். இவர் மீது, கடலுார் மாவட்ட காவல் துறையில், அங்குள்ள த.வெ.க.,வினரும் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, பொன்ராஜ் மீது, கடலுார் மாவட்ட காவல் துறையினரும், சென்னை மாநகர போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
