அன்புமணி விளக்கம் அளிக்க மறுப்பு; கட்சி விரோத நடவடிக்கை பாயுமா?
அன்புமணி விளக்கம் அளிக்க மறுப்பு; கட்சி விரோத நடவடிக்கை பாயுமா?
ADDED : செப் 11, 2025 04:50 AM

திண்டிவனம்: அன்புமணிக்கு இரண்டாவது தடவையாக ராமதாஸ் தரப்பில் அனுப்பப்பட்ட விளக்க நோட்டீசின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அவர் மீது கட்சி விரோத நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி அரு கே உள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில் கடந்த ஆக., 17ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்தது. பின், குழு உறுப்பினர்கள், அன்புமணி மீதான தங்கள் கருத்துகளை தனித்தனியாக சீலிட்ட கவரில் வைத்து ராமதாசிடம் ஒப்படைத்தனர். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து, ராமதாஸ் இறுதி முடிவெடுப்பார் எனவும் அறிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி ராமதாஸ் கூறும்போது, 'ஏற்கனவே அனுப்பியுள்ள நோட்டீசிற்கு அன்புமணி விளக்க கடிதம் கொடுக்கவில்லை. அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்' என்று கூறினார்.
இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.
இதை தொடர்ந்து, இன்றை ய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அன்புமணி மீதான கடும் நடவடிக்கை குறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் கூறி ன.
ராமதாஸ் தரப்பு
கேவியட் மனு
தாக்கல்
பா.ம.க., நி றுவனர் ராமதாசிற்கும், மகன் அன்புமணிக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம், தாங்கள் தான் உண்மையான பா.ம.க., என்று முறையிட்டு, அதற்கான ஆவணங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கட்சிக்கும் சின்னத்திற்கும் அன்புமணி தரப்பினர் உரிமை கோரி வழக்கு தொடுத்தால், தங்கள் தரப்பில் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கூறியிருக் கின்றனர்.