ADDED : ஜூன் 03, 2026 01:17 AM

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, தேஜஸ் உட்பட ஒன் பது விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை: மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - மதுரை காலை 6:00 மணி தேஜஸ் ரயில், வரும் 20ம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை - எழும்பூர் மாலை 3:30 மணி தேஜஸ் ரயில், வரும் 20ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்
நாகர்கோவில் - மும்பை லோக்மானிய திலக் ரயில், வரும் 11, 14, 21, 25, 28, ஜூலை 2, 5ம் தேதிகளில் மதுரை, காரைக்குடி, திருச்சி என, மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், திண்டுக்கல் செல்லாது
கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயில், வரும் 13, 20, 27, ஜூலை 4ம் தேதிகளில், மதுரை, திருச்சி என மாற்றுப் பாதையில் செல்வதால், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது
குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், வரும் 7 முதல் ஜூலை 6 வரையில், வரும் 16, 23, 30ம் தேதிகள் தவிர்த்து, இதர நாட்களில் மாற்றுப் பாதையில் செல்வதால், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறையில் நிற்காது
கன்னியாகுமரி - தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விரைவு ரயில், வரும் 12, 19, 26, ஜூலை 3ம் தேதிகளில் மாற்றுப் பாதையில் செல்வதால், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது
நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா விரைவு ரயில், வரும் 6, 13, 20ம் தேதிகளில், திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படுவதால், திருச்சி செல்லாது
துாத்துக்குடி - காச்சிகுடா விரைவு ரயில், வரும் 10ம் தேதி மாற்றுப் பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது
மதுரை - ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் ரயில், வரும் 18ம் தேதி மாற்றுப் பாதையில் செல்வதால், திண்டுக்கல் செல்லாது
மதுரை - எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில், வரும் 17ம் தேதி மாலை 3:30 மணிக்கு பதிலாக மாலை 4:30 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
