/

செய்திகள்

/

தமிழகம்

/

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

/

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!


ADDED : ஜூன் 13, 2025 12:07 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் புட் பாய்சன் ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கடந்த ஒரு வருடமாக நாள்தோறும் 1,000 லிட்டர் பால் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதுமட்டுமின்றி கெமிக்கல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளது. தென்காசி நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகமது சோதனை மேற்கொண்டார்.

அப்போது ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி முப்பிடாதி 45, லட்சுமி, 40, மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகியோர் கைது செய்தனர். ரசாயனம் கலக்கப்பட்ட 300 லிட்டர் பாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தென்காசியில் கெமிக்கல் கலக்கப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது திடீர் பரபரப்பை கிளப்பி உள்ளது.