தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்

 10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்

 10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்


ADDED : மார் 11, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இம்மாதம் 2-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன.

மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில், 9 லட்சத்து 9,002 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 25,801 தனித்தேர்வர்கள், 395 சிறைக் கைதிகள் அடங்குவர்.

தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும். தேர்வு குறித்து சந்தேகம் இருந்தால், 94983 83075, 94983 83076 ஆகிய மொபைல் எண்களையும், பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற இலவச உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us