உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 26, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 42.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் நேற்று, எட்டு நகரங்களில் வெயில் சதமடித்தது. இதில் வேலுாரில் அதிகபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 42.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில், தலா, 106 டிகிரி பாரன்ஹீட், அதாவது 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை, நுங்கம்பாக்கம், மதுரையில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கரூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூரில், தலா, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
