உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 29, 2026 01:21 AM

அ நிறம் | அளவு
சென்னை, மே 29-
சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
கத்திரி வெயில் காலத்தின் கடைசி நாளான நேற்று, தமிழகம், புதுச்சேரியில், 15 நகரங்களில் வெயில் சதமடித்தது. இதில் அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில், 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, வேலுார் ஆகிய நகரங்களில் தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
கடலுார், ஈரோடு, கரூர், காரைக்கால், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில் தலா, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
