தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பொய்த்து போன சாத்துார் தொகுதி சென்டிமென்ட்

பொய்த்து போன சாத்துார் தொகுதி சென்டிமென்ட்

பொய்த்து போன சாத்துார் தொகுதி சென்டிமென்ட்


UPDATED : மே 05, 2026 05:41 PM

ADDED : மே 05, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 05:41 PM ADDED : மே 05, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:சாத்துார் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதன் மூலம் எப்பொழுதும் ஆளுங்கட்சி தொகுதி தான் என்ற சென்டிமென்ட் பொய்யானது.

2011 ல் தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகு சாத்துார் தொகுதி எப்பொழுதும் ஆளுங்கட்சி தொகுதியாகவே இருந்து வந்தது.

2011ல் அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெற்றது ஆர்.பி. உதயகுமார் வெற்றி பெற்று அமைச்சரானார். இதன் பின்னர் 2016 அ.தி.மு.க.வை சேர்ந்த சுப்பிரமணியன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ., ஆனார்.

2018ல் முன்னாள் முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, அ.தி.மு.கவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எஸ். ஜி.சுப்பிரமணியன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவர் டி.டி.வி. தினகரன் அணியில் போட்டியிட, இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட எம். எஸ். ஆர். ராஜவர்மன் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் பேசி வந்த நிலையில் சாத்துார் தொகுதியில் எம். எஸ். ஆர். ராஜவர்மன் எம்.எல்.ஏ., வாக வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்தது.

இதன் பின்னர் 2016 ல் மக்கள் நல கூட்டணியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்த ம.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் ஏ .ஆர் . ஆர். ரகுராமன், 2021ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்தது.

இதனால் சாத்துார் சட்டசபை தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளரின் கூட்டணி கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்தது.

சாத்துார் தொகுதி மக்களிடையே சாத்துார் தொகுதி எப்பொழுதும் ஆளுங்கட்சி தொகுதி தான் என்ற பேச்சு நிலவி வந்தது.

ஆனால் இந்த 2026 சட்டசபை தேர்தலில் 2011 ல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க வேட்பாளர் கடற்கரை ராஜ் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

சாத்துார் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றி பெற்றும் தி.மு.க. ஆளுங்கட்சியாக வில்லை. த.வெ.க 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் சாத்துார் தொகுதி எப்பொழுதும் ஆளும் கட்சி தொகுதி தான் என்ற சென்டிமென்ட் பொய்யானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us