/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நண்பரை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

/

நண்பரை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூன் 11, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:-விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மனைவியுடன் பழகியதால் ஏற்பட்ட சந்தேகத்தாலும், டூவீலரை அடமானம் வைத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தாலும் நண்பர் விக்னேஷை கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷ் ராஜாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர்கள் சுரேஷ் ராஜா 24, விக்னேஷ் 24, இருவரும் நண்பர்கள். டிரைவராக வேலை செய்து வந்தனர்.

இருவரும் குடும்ப ரீதியாக பேசி பழகி வந்த நிலையில், விக்னேஷ் மனைவியுடன் சுரேஷ் ராஜா பழகியதால் ஏற்பட்ட சந்தேகத்தாலும், அவரது டூவீலரை அடமானம் வைத்த சம்பவத்திலும் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2020 ஜூலை 16ல் விக்னேஷை, சுரேஷ் ராஜா டூவீலரில் அழைத்து சென்ற நிலையில், மறுநாள் பந்தல்குடி பெரிய கண்மாய் கரை முட்புதரில் விக்னேஷ், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சுரேஷ்ராஜாவை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இதில் சுரேஷ் ராஜாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.