தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயல்படாத பூங்காக்கள் மக்கள் அவதி

 செயல்படாத பூங்காக்கள் மக்கள் அவதி

 செயல்படாத பூங்காக்கள் மக்கள் அவதி


ADDED : மே 11, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் நகரின் பல பகுதிகளில் பூங்காக்கள் உள்ளது. ஒவ்வொன்றும் தலா ரூ. 25 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. 5 வது வார்டு ரயில்வே பீடர் ரோடு, 6 வது வார்டு மீனாம்பிகை நகர் பகுதியில் பூங்காக்கள் அமைக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில், அந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்து விட்டன. உள்ளே முட்புதர்களும் செடிகளும் வளர்ந்தும் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இந்தப் பகுதி மக்கள் பொழுதுபோக்கிற்கு மற்றும் காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்வதற்கு கூட, முடியாமல் தவிக்கின்றனர். தற்போது அடிக்கிற கொளுத்தும் வெயிலில் காற்றாட பூங்காக்கள் இருந்தும் செல்ல முடியாமல் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பூங்காக்களை பராமரித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us