/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிநவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்'... அமைக்கப்படுமா? திண்டிவனம், செஞ்சி சப் டிவிஷன் போலீசார் எதிர்பார்ப்பு
/
அதிநவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்'... அமைக்கப்படுமா? திண்டிவனம், செஞ்சி சப் டிவிஷன் போலீசார் எதிர்பார்ப்பு
அதிநவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்'... அமைக்கப்படுமா? திண்டிவனம், செஞ்சி சப் டிவிஷன் போலீசார் எதிர்பார்ப்பு
அதிநவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்'... அமைக்கப்படுமா? திண்டிவனம், செஞ்சி சப் டிவிஷன் போலீசார் எதிர்பார்ப்பு
ADDED : செப் 24, 2025 06:07 AM

விழுப்புரம் : விழுப்புரம், கோட்டக்குப்பம் சப் டிவிஷன்களில் வழங்கப்பட்டுள்ள அதி நவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீமை' திண்டிவனம், செஞ்சி சப் டிவிஷன்களிலும் அமைக்க வேண்டும் என போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வளவனுார், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லை பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வந்தது. இதேபோன்று, புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் புதுச்சேரி மாநில ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தது.
ஆரோவில் பீச்சுக்கு வரும் நபர்களிடம் திருட்டு, தகராறில் ஈடுபடுவது அதிகரித்தது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க, விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு, தமிழக அரசால் அதிநவீன வாகனத்துடன் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன வாகனம் விழுப்புரம் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய சப் டிவிஷன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதலாக ஒரு வாகனம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனங்கள் விழுப்புரம் தாலுகா, டவுன், மேற்கு காவல் நிலைய எல்லை பகுதிகளிலும், வளவனுார், கண்டமங்கலம் எல்லைகளிலும், கோட்டக்குப்பம், ஆரோவில் எல்லை பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
இந்த வாகனத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நான்கு பக்க கேமராக்கள், ஜி.பி.எஸ்., கருவி, ஆடியோ, வீடியோ, ஒலிபெருக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு முதல் நிலைக் காவலர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கு, துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போலீசார் ஒருவரை சோதனை செய்தால் அவர் மீது வழக்குகள் உள்ளதா, இல்லையா என்பதை அங்கேயே அறியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே கண்டறிந்து காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
இதனால், புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில், புதுச்சேரி மாநில ரவுடிகளால் பிரச்னை ஏற்படுவது, ஆரோவில் பீச்சில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவது குறைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்' ரோந்து வாகனத்தை திண்டிவனம் மற்றும் செஞ்சி சப் டிவிஷன்களிலும் இயக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசாரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி இயக்கினால், மாவட்டத்தில் குற்றங்களை வெகுவாக குறைக்க முடியும்.