/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி பண்டிகை தினத்தில் விழுப்புரம் பஸ் நிலையம் 'வெறிச்'
/
தீபாவளி பண்டிகை தினத்தில் விழுப்புரம் பஸ் நிலையம் 'வெறிச்'
தீபாவளி பண்டிகை தினத்தில் விழுப்புரம் பஸ் நிலையம் 'வெறிச்'
தீபாவளி பண்டிகை தினத்தில் விழுப்புரம் பஸ் நிலையம் 'வெறிச்'
ADDED : அக் 20, 2025 09:35 PM

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கு, வெளி மாவட்டம், மாநிலங்களில் பணிபுரிந்தோர், கல்லுாரி பயின்றோர் உள்ளிட்டோர் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பே சென்றனர்.
இதற்காக, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன.
இதையடுத்து, நேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், பயணிகளை ஊர்களுக்கு ஏற்றி செல்ல பஸ்கள் இருந்தும், பொதுமக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால், பஸ் நிலையத்தில் உள்ள பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி காலியாக ஊர்களுக்கு சிலரை மட்டும் வைத்து கொண்டு புறப்பட்டு சென்றது. இதனால், பஸ் நிலையமே பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.