/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சி விழுப்புரம் போலீஸ் 'அலர்ட்' பா.ம.க.,வில் இரு அணிகளாக...
/
தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சி விழுப்புரம் போலீஸ் 'அலர்ட்' பா.ம.க.,வில் இரு அணிகளாக...
தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சி விழுப்புரம் போலீஸ் 'அலர்ட்' பா.ம.க.,வில் இரு அணிகளாக...
தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சி விழுப்புரம் போலீஸ் 'அலர்ட்' பா.ம.க.,வில் இரு அணிகளாக...
ADDED : செப் 16, 2025 03:29 AM
ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் உள்ள நினைவிடங்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். தற்போது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.
இதனால், நாளை (17ம் தேதி) தியாகிகளின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு காவல் துறையில் அனுமதி கேட்டு இரண்டு அணிகளும் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.
அதில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் அன்று காலை 8:00 மணியளவில் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து புறப்பட்டு சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனுார் ஆகிய பகுதிகளில் உள்ள நினைவிடங்களுக்கு ராமதாஸ் தலைமையில் அஞ்சலி செலுத்திகின்றனர்.
பின், கோலியனுாரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் நான்குமுனை சிக்னல், முத்தாம்பாளையம் பை பாஸ் வழியாக ராமதாஸ் திண்டிவனத்திற்கு செல்கிறார்.
இதை தொடர்ந்து, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் காலை 11:00 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு கோலியனுார் வரை உள்ள நினைவு ஸ்துாபிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பின், அங்கிருந்து, விழுப்புரம் வழியாக அரசூர் சென்று கடலுார் மாவட்டம் கொள்ளுக்காரன் குட்டைக்கு அன்புமணி செல்கிறார்.
பா.ம.க.,வில் இரண்டு அணிகளாக உள்ள நிலையில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் எந்தவித சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
இதற்காக, இரண்டு அணிகளுக்கும் குறிப்பிட்ட நேர இடைவெளி கொடுத்துள்ளனர். இதனால், பாப்பனப்பட்டில் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க எஸ்.பி., சரவணன் நேற்று முன்தினம் அங்கு ஆய்வு செய்தார்.
பா.ம.க.,வில் இரண்டு அணிகளும் தனித்தனியாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளது விழுப்புரத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.