/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வட்டார விளையாட்டு போட்டி மாணவர்கள் அசத்தல்
/
வட்டார விளையாட்டு போட்டி மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 25, 2025 03:51 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்துாரில் மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும்
ஆர்.எஸ்.அறக்கட்டளை ஆகியவை இணைந்து கைப்பந்து, கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை சமீபத்தில், நடத்தியது.
வட்டார அளவில் நடந்த போட்டியில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர் நவீன் சந்திரன், 18; பெண்கள் பிரிவில், முட்டத்துார், ஒய் காப் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி, 16; ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
சிலம்பம் விளையாட்டில், சின்ன தச்சூர், அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி, 15; முதலிடமும், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிர்விந்தா, 12; இரண்டாம் இடத்தையும் பெற்றனர். கைப்பந்து போட்டியில் கெடார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கயிறு இழுத்தல் பிரிவில் விக்கிரவாண்டி வட்டார பெண்கள் வெற்றி பெற்றனர் .
வெற்றி பெற்றவர்களுக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழா ஏற்பாடுகளை பயிற்சியாளர் சுரேந்தர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.