
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அய்யனாரப்பன் கோவில் சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காகுப்பத்தில் உள்ள ஹரிகரபுத்திர அய்யனாரப்பன் கோவிலில், கும்பாபிஷே திருப்பணிகள் துவங்குவதற்கான, சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
காலை 9:30 மணிக்கு கணபதி ஹோமமும், ஹரிஹரபுத்திர சாஸ்தா ஹோமங்களுடன் யாகம் நடந்தது. தொடர்ந்து, பூரணி, பொற்கலை சமேத ஹரிஹர புத்திர அய்யனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுவாமி மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.