ADDED : செப் 04, 2025 05:37 AM

வானுார் : கிளியனுார் அடுத்த, டி.பரங்கனி கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் நடந்தது. மரக்காணம் வெள்ளக்குளம் வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனமும், மாவட்ட வேளாண்மை துறையும் இணைந்து மண் மற்றும் நீர் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்தது.
தொண்டு நிறுவன செயலாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ரா மார்டின் வரவேற்றார்.
பாரம்பரிய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசகர் மணி முன்னிலை வகித்தார். முகாமை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் துவக்கி வைத்தார்.
வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ், விழுப்புரம் மண் பரிசோதனை நிலைய வேளாண்துறை அலுவலர் கிருத்திகா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முகாமின் ஒரு பகுதியாக வன்னிப்பேர், டி.பரங்கனி, ஏந்துார் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, அவர்களது விவசாய நிலத்தின் மண் மற்றும் நீர்பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு தகுந்தாற்போல் விவசாய தொழில்நுட்பங்கள், பயிர் சுழற்சி முறை பயிர் வளர்ப்பு, உரமிடுதல் குறித்து பயிற்சி மற்றும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, விவசாயிகளுக்கு நீர்மாதிரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவன மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முறைசாரா பள்ளி ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.