/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கருத்தரங்கம்

/

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கருத்தரங்கம்

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கருத்தரங்கம்

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கருத்தரங்கம்


ADDED : ஜூன் 24, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, நிறுவனர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். ஹோலி ஏஞ்சல் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கீர்த்தி வாசன் வரவேற்றார்.

கோயம்புத்துார் அம்பாள் துளசி பள்ளி முதல்வர் சார்லின், ஜோசப் குளோபல் பள்ளி முதல்வர் கம்பெனி சகாய பெனிஸ்டன் ஆகியோர் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களுக்கு கலை சார்ந்த கல்வியை ஆடல் பாடல் மூலம் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து யோகா பயிற்சியை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மயிலம் அருகே உள்ள பள்ளிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ நன்றி கூறினார்.