தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அதே தொகுதி, அதே கட்சி, அதே வேட்பாளர் கூட்டணி தான் மாறியது ; இரு முறை வெற்றி

 அதே தொகுதி, அதே கட்சி, அதே வேட்பாளர் கூட்டணி தான் மாறியது ; இரு முறை வெற்றி

 அதே தொகுதி, அதே கட்சி, அதே வேட்பாளர் கூட்டணி தான் மாறியது ; இரு முறை வெற்றி


UPDATED : மே 07, 2026 07:51 PM

ADDED : மே 07, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2026 07:51 PM ADDED : மே 07, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி தொகுதியில், தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி என இரு தேர்தல்களில் பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட கணேஷ்குமார் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2016ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் செஞ்சி மஸ்தான் போட்டியிட்டு, 88 ஆயிரத்து 440 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இவரை எதித்து பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், 28 ஆயிரத்து 215 ஓட்டுகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் 2026 தேர்தலில், செஞ்சி தொகுதியில் மீண்டும் பா.ம.க., வேட்பாளராக கணேஷ்குமார் , மூன்றாவது முறையாக களம் இறங்கினார். இம்முறை தொகுதி, கட்சி, வேட்பாளர் மாறவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட கணேஷ்குமார், 2026ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் களம் இறங்கினார்.

இத்தேர்தலில், பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார், 78 ஆயிரத்து 201 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் மஸ்தான், 65 ஆயிரத்து 556 ஓட்டுகளும், த.வெ.க., வேட்பாளர் சந்திரசேகரன் 61 ஆயிரத்து 609 ஓட்டுகளும் பெற்றனர்.

செஞ்சி தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணியிலும், 2026ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலும், பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட, கணேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us