ADDED : ஜூன் 08, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: வளவனுாரில், காவல்துறை, பொதுமக்கள் நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணகுமார் தலைமையில், வளவனுார் கடைவீதியில், காவல்துறை சார்பில் போலீசார் அணி வகுப்பு நடந்தது. தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., சரணகுமார் பேசுகையில், 'பொதுமக்கள் அவசர காலங்களில் 100 மற்றும் 112 ஆகிய அவசர தொலைபேசி உதவி எண்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்கும் நடைமுறைகள், குற்றத் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு, சாலை பாதுகாப்பு ஆகியவற்றில் பொதுமக்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் வளவனுார் இஸ்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
