/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் அடித்துச்சென்ற அரசு பள்ளி சுற்றுசுவர் மைதானத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை
/
ஆற்றில் அடித்துச்சென்ற அரசு பள்ளி சுற்றுசுவர் மைதானத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை
ஆற்றில் அடித்துச்சென்ற அரசு பள்ளி சுற்றுசுவர் மைதானத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை
ஆற்றில் அடித்துச்சென்ற அரசு பள்ளி சுற்றுசுவர் மைதானத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 30, 2025 07:47 AM

விழுப்புரம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தளவனுார் அரசு பள்ளியின் சுற்றுசுவர், விளையாட்டு மைதானத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் அருகே தளவானுார் கிராமத்தில் ஆற்றங்கரை அருகே அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஆற்றங்கரை ஒட்டிய இரண்டரை ஏக்கர் பரப்புள்ள தோப்பு புறம்போக்கு பகுதியில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
இதனருகே பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமும் இருந்தது.
இப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில், கடந்த 2020ம் ஆண்டு 25 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்டினர். அடுத்த சில மாதங்களில் வந்த வெள்ளத்தில் அந்த அணையின் கரை பகுதிகள் உடைந்தன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021 நவம்பரில் வந்த வெள்ளத்தில் தடுப்பணை உடைந்ததால் அதிலிருந்து வந்த வெள்ளநீர் பள்ளியின் சுற்றுச்சுவரையும், 2 ஏக்கர் பரப்பிலான விளையாட்டு திடலையும் அடித்துச்சென்றது.
வெள்ளத்தில் சுவர்கள், மண் பரப்புகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. இதனையடுத்து, பள்ளி அருகே தற்காலிகமாக கருங்கல் கொட்டி வெள்ளத்தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உடைந்த தளவனுார் தடுப்பணையை 84 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணியை தற்போது தொடங்கியுள்ளது.
இதனால், அதனருகே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதான பகு தியை மீட்டு, மீண்டும் மைதா னம் ஏற்படுத்தி தர வேண்டும்.
பள்ளி வளாகத்தில் வெள்ள அபாயத்தை தடுக்கும் விதத்தில் மீண்டும் தடுப்புச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பள்ளி மேலாண்மை குழு சார்பில், இந்த பள்ளிக்கான சுற்றுசுவர் கட்டித் தரவும், மைதான இடத்தை மீட்டுத் தரவும், உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,வை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.