/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 75 பசுமாடுகள் ஏழைகளுக்கு வழங்கல்
/
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 75 பசுமாடுகள் ஏழைகளுக்கு வழங்கல்
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 75 பசுமாடுகள் ஏழைகளுக்கு வழங்கல்
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 75 பசுமாடுகள் ஏழைகளுக்கு வழங்கல்
ADDED : செப் 28, 2025 03:42 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓமந்துாரிலுள்ள, ஸ்ரீராம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில், பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 1008 கோ பூஜை மற்றும் 75 ஏழைகளுக்கு பசு மாடு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
பா.ஜ.,மாநில செயலாளர் முரளிரகுராமன் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் சண்முகம் எம்.பி., 75 ஏழைகளுக்கு இலவச பசுமாடுகளை வழங்கினார்.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் 1,008 பசுக்களை வைத்து வேத மந்திரங்கள் முழங்க கோ பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், பா.ஜ., மாநில துணை தலைவர் சம்பத், பா.ஜ.,மாநில அலுவல செயலாளர் சந்திரன், விழுப்புரம் மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், டிரஸ்டி அரிகிருஷ்ணன், தென்கோடிப்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முரளிரகுராமன் செய்திருந்தார்.