/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாய்க்காலில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
வாய்க்காலில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
வாய்க்காலில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
வாய்க்காலில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 19, 2025 02:51 AM

திண்டிவனம்: ராஜாங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம், நகர மையப் பகுதியில், 15 ஏக்கர் பரப்பளவில், ராஜாங்குளம் உள்ளது. இக்குளத்திற்கு, மழைக் காலங்களில் மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வரும் நீர், திண்டிவனம் அய்யந்தோப்பு, மாரிசெட்டிக்குளம் வாய்க்கால் வழியாக, ராஜாங்குளத்திற்கு வந்தடையும்.
இந்நிலையில், செஞ்சி சாலை அம்மா உணவகம் பின்புறம் உள்ள இந்த குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ராஜாங்குளத்திற்கு மழைநீர் வரத்து கேள்விக்குறியாகியுள்ளது. அப்படியே மழைநீர் வந்தால், வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களும் குளத்திற்கு வந்து மாசு ஏற்படுத்தும் நிலை உள்ளது.
எனவே, மழைக்கு முன் இந்த வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.