/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்த மக்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்த மக்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை
ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்த மக்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை
ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்த மக்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை
ADDED : செப் 04, 2025 02:40 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை மக்கள் தாங்களாகவே காலி செய்த நிலையில், மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 3 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய்த்துறையினர் இணைந்து, வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கினர்.
கோர்ட் உத்தரவுப்படி, இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு மற்றும் கடைகளை கட்டியுள்ளவர்கள் பலர் பொருட்களை காலி செய்து வேறு இடங்களுக்கு எடுத்து சென்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்கள், கண்ணீருடன் வீடுகளை தாங்களாகவே முன்வந்து காலி செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த எம்.எல்.ஏ., அர்ஜூனனிடம், தங்களுக்கு மாற்று இடம் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வீடுகளை காலி செய்பவர்களுக்கு தற்காலிகமாக தங்கும் இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு எம்.எல்.ஏ., கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.