/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத போலீஸ் செஞ்சியில் மக்கள் அவதி
/
திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத போலீஸ் செஞ்சியில் மக்கள் அவதி
திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத போலீஸ் செஞ்சியில் மக்கள் அவதி
திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத போலீஸ் செஞ்சியில் மக்கள் அவதி
ADDED : செப் 23, 2025 07:36 AM

பொது மக்களுக்கு அடிப்படை தேவைகள் சென்றடையவும், மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்காக அரசு துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு துறை சரிவர செயல்படவில்லை எனில் பொது மக்களுக்கான தேவைகள் நிறைவடையாமல் போவதுடன், அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
இதற்கு உதாரணமாக செஞ்சியில் திருவண்ணாமலை சாலை உள்ளது. 100 அடி அகலம் உள்ள இந்த சாலையில் 20 அடியை மட்டுமே பொது மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
பிரதான தார்சாலையை ஒட்டி ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் சாலை வரை பொருட்களை வவைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், சாலையை ஒட்டி கடை பெயர் பலகைகள், விளம்பரங்களை வைத்துள்ளனர்.
நடை பாதையை முழுமையாக ஆக்கிரமித்து கடை நடத்துகின்றனர். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடை முன் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்குள்ள சாலையை அகலப்படுத்த மின் கம்பங்கள் தடையாக உள்ளன. மின் கம்பங்களை கடந்த 5 ஆண்டாக இடமாற்றம் செய்யாமல் மின்வாரியம் மெத்தனமாக உள்ளது.
நெடுஞ்சாலைத் துறையும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருவத்தில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் இந்த சாலையை கண்டு கொள்வதில்லை.
ஒவ்வொரு நாளும் செஞ்சி கூட்ரோட்டிலும், எஸ்.பி.ஐ., வங்கி எதிரிலும் 10 நிமிடத்திற்கு ஒருமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ்களும் செல்ல முடிவதில்லை.
காவல்துறை அதிகாரிகள் களத்திற்கு வருவதில்லை. இவர்கள் நேரில் ஆய்வு நடத்தினால் பொதுமக்களின் அவதி புரியவரும். அரசுத் துறைகளின் அலட்சிய போக்கினால் நகர மக்கள் நாள்தோறும் அவதிக்குள் ஆளாகி வருகின்றனர்.
உள்ளூர் அதிகாரிகள் செயல்படாமல் இருப்பதால் காவல் துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தி தினமும் பொதுமக்களுக்கு ஏற்படும் அவதியில் இருந்து தீர்வு காணவேண்டும்.