/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இணையதள தொழில்நுட்ப பயிற்சி மையம் திறப்பு விழா
/
இணையதள தொழில்நுட்ப பயிற்சி மையம் திறப்பு விழா
ADDED : செப் 18, 2025 03:57 AM

வில்லியனுார்:வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் துவக்க விழா மற்றும் உலக இணையதள தொழில்நுட்ப பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது.
அரியூர் வெங்கடேஸ்வரா சாய் அரங்கில் நடந்த விழாவிற்கு ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜிவ்கிருஷ்ணா தலைமை தாங்கினார். கல்வி குழும முதன்மை இயக்குனர் மவுஷ்மி, முதன்மை இயக்க அதிகாரி வித்யா மற்றும் பொதுமேலாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அசையர் டெக்னாலஜி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பரதன் பிரகலாதன் பங்கேற்று, ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் நுட்ப நுண்ணறிவு பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசுகையில், ''உலக அளவில் ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு முன்னோடியாக விளங்குவது ஸ்டார்ட் அப் என்ற புதிய ஐடியாவை உருவாக்க காரணமாக உள்ள தொழில் நுட்பங்களை நாம் உருவாக்கி, புதிய தொழில்களை துவங்க முன்வர வேண்டும். தொழில் முனைவோராக மாற புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க இந்த மையம் வழிகாட்டும். ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்களை பொறியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்'' என்றார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் தலைமை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்வி குழு மத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் கல்லுாரி துணை முதல்வர் ஜெயராமன் நன்றி கூறினார்.