/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
/
சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
ADDED : செப் 14, 2025 01:11 AM

விழுப்புரம் : 'சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது; சமாதானமாக விட்டுக்கொடுத்து போவதால், நீண்டகால வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும்' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி பேசினார்.
விழுப்புரம் கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதை சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது:
பொதுமக்களிடையே எழும் பிரச்னைகளுக்கு எளிதாக, விரைவாக தீர்வு காண்பதற்காகவே தேசிய மக்கள் நீதி மன்றம் துவங்கப்பட்டது.
இதில் மக்கள் தான் நீதிபதிகள். நீங்கள் தான் வழக்கிற்கு நல்ல முடிவெடுக்க வேண்டும். விரோதம், குரோதம், ஈகோ போன்றவைகளை மறந்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வதால், நீண்டகால பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
நான் வழக்கறிஞராக இருந்தபோது, எதிர் வீட்டுக்காரர் வழக்கு தொடுத்ததால், வீடு கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. நான் நேரடியாகவே எதிர் வீட்டிற்கு சென்று பேசியதால், எங்களுக்குள் சமாதானமும் ஏற்பட்டு, குடும்ப நட்பும் வளர்ந்தது.
எதையுமே சண்டையிட்டு சாதிக்க முடியாது. அனைவரிடமும் நட்புடனும், அன்புடனும் பேசி நடப்பதால் நல் வாழ்க்கை அமையும்.
இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், பிரிந்த 3 தம்பதிகள் இணைந்துள்ளது பெருமை. இதுவே மக்கள் நீதிமன்றத்தின் வெற்றி. அன்பான குடும்ப வாழ்க்கை அனைவருக்கும் அவசியம்.
சமாதானமாக போவதால், வழக்கிற்கு தீர்வு காண்பதோடு, குடும்பங்களும் இணைகின்றன. சமாதானம் ரீதியில் மக்கள் முடிவெடுத்தால், நீதிமன்றங்களுக்கு வேலையிருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.