/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன
ADDED : செப் 16, 2025 06:44 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நேற்று 448 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை செய்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், தொழில் துவங்க கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 448 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.