/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலாமேடு மெயின்ரோட்டில் குப்பை கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பு
/
சாலாமேடு மெயின்ரோட்டில் குப்பை கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பு
சாலாமேடு மெயின்ரோட்டில் குப்பை கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பு
சாலாமேடு மெயின்ரோட்டில் குப்பை கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பு
ADDED : மே 29, 2025 11:28 PM

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு மெயின்ரோடில் குப்பை, கழிவுகள் கொட்டி ஆக்கிரமிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் கே.கே.ரோடில், புறநகர் பகுதியான சாலாமேடு சிஸ் நகர் பகுதியில், சாலையோரம் நீண்டகாலமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள மருதூர் ஏரிக்கரை பகுதியில் ஏற்கனவே குப்பைகள் கொட்டுவதும், அதனை தீ வைத்து எரிப்பது, ஷெட் போட்டு பன்றி வளர்ப்பது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வந்தது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் கூறியதால், அங்கு குப்பைகள் கொட்டுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்தனர்.இந்த நிலையில், தற்போது விழுப்புரம் கே.கே.ரோடு-தளவனூர் சாலை மெயின்ரோடாக அகலப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மீண்டும், இந்த சாலையோரம் சிஸ் நகர் பகுதி எதிரே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. புதிய தார்ச்சாலை போட்டு அழகுபடுத்தியுள்ள நிலையில், அங்கு குப்பைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என மினி லாரி, வாகனங்களில் வந்து கொட்டி செல்கின்றனர். இதனால், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
பிரதான மெயின் ரோடையும் ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருவதால், அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், நகராட்சியிலும் புகார் கொடுத்துள்ளனர்.