/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.84 கோடியில் தளவானுார் அணைக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
/
ரூ.84 கோடியில் தளவானுார் அணைக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
ரூ.84 கோடியில் தளவானுார் அணைக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
ரூ.84 கோடியில் தளவானுார் அணைக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 27, 2025 02:26 AM

விழுப்புரம் : தளவானுார் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உடைந்த அணைக்கட்டு, 84 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், தளவானுார் - கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2020ம் ஆண்டு 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
தரமற்ற பணியால் அடுத்த சில மாதங்களில் வந்த வெள்ளத்தில், 2 கரை பகுதி நீர்போக்கி கட்டுமானங்களும் அடித்துச்செல்லப்பட்டது. அடுத்தாண்டு வந்த வெள்ளத்தில், இடதுபுற தளவனுார் கரை பகுதியின் நிலங்களையும் வெள்ளம் அடித்துச்சென்றதோடு, ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால், வெடி வைத்து பழைய அணைக்கட்டை தகர்த்தனர்.
இதனையடுத்து, நீண்டகால விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, 84 கோடி ரூபாயில் அணைக்கட்டு புதிப்பித்து கட்டப்படும் என அரசு அறிவித்ததையடுத்து 84.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதனைத்தொடர்ந்து, தளவனுாரில் அணைக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த அணைக்கட்டு, அதே பகுதியில் 480 மீட்டர் அகலத்திலும், 2.30 மீட்டர் உயரத்திலும் புதுப்பித்து கட்டப்பட உள்ளது. அதிகபட்சமாக 2.43 லட்சம் கன அடி வெள்ள நீர் கடந்து செல்லும் திறனுடன் அமையும்.
இருபுறமும் தலா 5 மணற்போக்கிகள், 3 மீட்டர் அகலம், 2.30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும். அணையின் மேற்புறம் வலது மற்றும் இடது கரையானது 1600 மீ., நீளத்திலும், கூடுதல் வெள்ளத்தடுப்பு கரைகளும் புதுப்பித்து கட்டமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் அருணகிரி, தாசில்தார் கனிமொழி, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி.
விவசாய அணி கேசவன், தேவகிருஷ்ணன், கலியமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் பாரதி தட்சணாமூர்த்தி, சரவணன், முன்னாள் தலைவர் ராஜா, அர்ஜூனன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.