/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்னணு பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கீடு; மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு

ADDED : செப் 02, 2025 09:55 PM

வானுார்; காரிப் பருவத்தில் மின்னணு பயிர் சாகுபடி பரப்பு கணக்கீட்டை, விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் காரிப் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை வேளாண்மை துறை, தோட்டகலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்புபணி நடைபெற்று வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 67 ஆயிரத்து 779 உட்பிரிவு எண்களில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வானுார் அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில் காரிப் பருவத்தில் மின்னணு முறையில் நெற்பயிர் சாகுபடி கணக்கீடுகளை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ், துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், பயிர் அறுவடை பரிசோதகர் திவ்யா மற்றும் விவசாயி ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.